செங்கோட்டையில் காங்கிரசார் ரெயில் மறியலுக்கு முயற்சி; 132 பேர் கைது
செங்கோட்டையில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 132 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை:
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை ெரயில் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மோகன் அருணாச்சலம், மாவட்ட துணைத்தலைவர் சிவராம கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில செயற்குழு உறுப்பினர் சட்டநாதன், எஸ்.சி.எஸ்.டி.பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் லட்சுமணன், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் காமராஜ், முத்துசாமி, திருஞானம், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, கிருஷ்ணன், தென்காசி நகரத் தலைவர் ஜோதிடர் மாடசாமி, செங்கோட்டை நகர தலைவர் ராமர், கடையநல்லூர் நகர தலைவர் முகம்மது அபுதாஹிர், மாநில பேச்சாளர்கள் ஆலடி சங்கரய்யா, பால்துரை, வட்டார தலைவர்கள் கதிரவன், கார்கின், பெருமாள், மகேந்திரா, ஜெகநாதன் உள்பட பலர் ரெயில் மறியல் பேராட்டத்துக்கு சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் தென்காசி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் அங்கு வந்தனர். பழனி நாடார் எம்.எல்.ஏ. உள்பட 132 பேரை கைது செய்து செங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.