வீட்டில் கொள்ளை முயற்சி
வீட்டில் கொள்ளை முயற்சி
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் இளங்கடை வேதநகரை சேர்ந்தவர் அஸ்மான் யூசுப் (வயது 27). இவர் பெருவிளையில் உள்ள தன்னுடைய மனைவி வீட்டில் வசித்து வருகிறார். இதனால் கடந்த 2 மாதமாக வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அஸ்மான் யூசுப் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் அஸ்மான் யூசுப் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.