வேடசந்தூரில் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சி: சமூக வலைத்தளங்களில் வைரலான கண்காணிப்பு கேமரா காட்சி


வேடசந்தூரில் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சி: சமூக வலைத்தளங்களில் வைரலான கண்காணிப்பு கேமரா காட்சி
x

வேடசந்தூரில நகை்கடையிில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

திண்டுக்கல்

வேடசந்தூர் கடைவீதியில் உள்ள திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கடந்த 20-ந்தேதி அதிகாலை முகமூடி அணிந்த 2 பேர் சுற்றித்திரிந்தனர். பின்னர் அவர்கள் வங்கி எதிரே உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்தனர். மேலும் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது எதிரே உள்ள வங்கியின் காவலாளி இதை பாா்த்து கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


Next Story