டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி


டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
x

சிவகாசி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ஆணையூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளராக வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வேல்முருகன் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் டாஸ்மாக் கடைக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து மாரனேரி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் டாஸ்மாக்கடைக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். டாஸ்மாக்கடையில் பணம், மதுபாட்டில் எதுவும் திருடப்படவில்லை. கொள்ளை முயற்சி சம்பவம் மட்டும் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story