வராஹியம்மன் கோவில் உண்டியலில் கொள்ளை முயற்சி
நெமிலி அருகே வராஹியம்மன் கோவில் உண்டியலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
நெமிலி
நெமிலி அருகே வராஹியம்மன் கோவில் உண்டியலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
நெமிலியை அடுத்த பள்ளூர் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை வராஹியம்மன் கோவில் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியல் காணிக்கையை கொள்ளையடிக்க முயன்றனர். கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள், உண்டியலுடன் இணைக்கப்பட்டு இருந்த அலாரம் ஆகியவற்றின் இணைப்பை துண்டித்து விட்டு, உண்டியலின் மேல் பகுதியில் பூட்டப்பட்டு இருந்த பூட்டை உடைத்து காணிக்கையை திருட முயன்றனர். ஆனால், உண்டியலின் உள்புறமாக மேலும் ஒரு பூட்டு போடப்பட்டு இருந்ததால், உண்டியல் காணிக்கையை கொள்ளையடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் ேகாவில் உண்டியலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.