அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சி


அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சி
x

நாட்டறம்பள்ளி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பக்கத்து வீட்டு வாகனத்தில் பெட்ரோலை திருடி ஊற்றி ஸ்கூட்டியை ஓட்டி சென்றனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பக்கத்து வீட்டு வாகனத்தில் பெட்ரோலை திருடி ஊற்றி ஸ்கூட்டியை ஓட்டி சென்றனர்.

ஸ்கூட்டி திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே. பந்தாரப்பள்ளி குதுவுமேடு பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 37). அதிகாலை 3 மணி அளவில் இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அப்போது அந்த ஸ்கூட்டியில் பெட்ரோல் இல்லாததால், அருகே தேவராஜ் (53) என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டியூப்பை வெட்டி அதிலிருந்து பெட்ரோலை திருடி, ஸ்கூட்டியில் ஊற்றி ஓட்டிச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை

அதன் பின்னர் அங்குள்ள நடராஜன் (37) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பீரோவைஉடைத்து பார்த்ததில் பீரோவில் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த 150 ரூபாயை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காந்தி கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story