தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
நெல்லை அருகே குடும்ப பிரச்சினையால் தூக்க மாத்திரைகளை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
நெல்லை அருகே குடும்ப பிரச்சினையால் தூக்க மாத்திரைகளை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
போலீஸ் ஏட்டு
நெல்லை அருகே உள்ள அரியகுளம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் நெல்லை மாநகர டவுன் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தற்போது மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார்.
மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவியின் மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
தூக்க மாத்திரைகள் தின்றார்
நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த ரவி அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தன்னுடன் வேலைபார்க்கும் சக போலீசாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள், ரவி வீட்டிற்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரபரப்பு
இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனது மனைவி குழந்தைகளை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ரவி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.நெல்லை அருகே தூக்க மாத்திரைகளை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.