கந்து வட்டி கொடுமையால் 3 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கந்து வட்டி கொடுமையால்  3 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி  சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x

கந்து வட்டி கொடுமையால் 3 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ேசலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம்,

தீக்குளிக்க முயற்சி

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவருடைய மனைவி கலா (53). இவர்களது மருமகள் சாந்தகுமாரி (33). இவர்கள் 3 பேரும் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று மறைத்து எடுத்து வந்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.இதை பார்த்த அங்கிருந்த போலீசார் மண்எண்ணெய்யை பிடுங்கி அவர்களை அப்புறப்படுத்தினர்.

இது குறித்து சாந்தகுமாரி கூறும் போது, எனது கணவர் ரமேஷ் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்த ஒருவரிடம் பல தவணைகளில் ரூ.29 லட்சம் கடன் வாங்கினார். அதற்கு ரூ.50 லட்சம் வரை செலுத்திவிட்டார். ஆனால் பணம் கொடுத்தவர் கந்து வட்டி போட்டு இன்னும் ரூ.63 லட்சம் தரவேண்டும் என்று கூறி எனது கணவரை தாக்கினார்.

கந்து வட்டி கொடுமை

மேலும் வெள்ளிப்பட்டறையில் இருந்து பொருட்களை சேதப்படுத்தி விட்டு பட்டறையை மூடி சாவியை எடுத்து சென்று விட்டார். எனவே கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம் என்று கூறினார்.

இதையடுத்து அவர்களை போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும் படி அனுப்பி வைத்தனர். கந்து வட்டி கொடுமையால் மாமனார், மாமியார், மருமகள் ஆகிய 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story