வீடு புகுந்து திருட முயற்சி- பிடிபட்ட வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி


வீடு புகுந்து திருட முயற்சி- பிடிபட்ட வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
x

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்தனர். அவர்களில் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்தனர். அவர்களில் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

நள்ளிரவில் திருட முயற்சி

போலீசில் ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவர் கழுத்தை அறுகத்்

வாணியம்பாடியை அடுத்த கனவாய் புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவர் அதேப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகின்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த வல்லரசு (வயது 26) மற்றும் கவுதம் (24) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்தியின் வீட்டின் பின்புறமாக சென்று பூட்டை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை பிடிக்க முயன்றனர்.

கழுத்தை அறுத்துக்கொண்டார்

அப்போது தப்பி ஓடிய ஒருவர் பக்கத்து வீட்டுக்குள் புகுந்தார். மற்றொருவர் சிறிது தூரத்தில் மறைந்திருந்தா. அவர்கள் இருவரையும் பொதுமக்கள் பிடித்து, போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வருவதற்குள் வல்லரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இதனைக் கண்ட பொதுமக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வல்லரசு அழைத்து செல்லப்பட்டார். இந்த நேரத்தில் திடீரென உடன் வந்த கவுதம் தப்பி ஓடி விட்டான். சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் வீடு புகுந்து திருட முயன்ற வல்லரசு குடிபோதையில் இருப்பதால் சிகிச்சை பெற்று திரும்பிய பின்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என பொதுமக்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story