481 வாகனங்கள் ரூ.29 லட்சத்திற்கு ஏலம்

தர்மபுரி மாவட்டத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 481 வாகனங்கள் ரூ.29 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் ஆகியோரது முன்னிலையில் ஒவ்வொரு வாகனமாக ஏலம் விடப்பட்டது. அதன்படி 4 சக்கர வாகனங்கள்- 7 மற்றும் 2 சக்கர வாகனங்கள்- 474 என மொத்தம் 481 வாகனங்கள் ரூ.29 லட்சத்துக்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story