திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்


திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்
x
நாமக்கல்

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 260 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்தனர். பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 299 முதல் ரூ.8 ஆயிரத்து 9 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

இதேபோல் நடந்த எள் ஏலத்துக்கு 250 மூட்டை எள் கொண்டு வரப்பட்டது. கருப்பு எள் ஒரு கிலோ ரூ.143 முதல் ரூ.156 வரையும், வெள்ளை எள் ஒரு கிலோ ரூ.144 முதல் ரூ.158 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.26 லட்சத்துக்கு எள் வர்த்தகம் நடந்தது.


Next Story