வாரச்சந்தைகள் நடத்துவதற்கான ஏலம்


வாரச்சந்தைகள் நடத்துவதற்கான ஏலம்
x

கெங்கநல்லூர், கரடிகுடி வாரச்சந்தைகள் நடத்துவதற்கான ஏலம் நடைபெற்றது.

வேலூர்

அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கநல்லூர் மற்றும் கரடிகுடி வாரச்சந்தைக்கான ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலாவதாக கெங்கநல்லூர் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலதாரர்கள் இடையே சலசலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஏலாதாரர்களை சமாதானப்படுத்தி தொடர்ந்து ஏலம் நடத்த ஏற்பாடு செய்தார். தவமணி என்பவர் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். அவருக்கு ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கரடிகுடி சந்தைக்கான ஏலம் மாலை 3 மணிக்கு நடந்தது. ராமச்சந்திரன் என்பவர் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

இதுகுறித்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் கூறுகையில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு ஆகியோரின் அறிவுறுத்தலின்படி எனது பங்களிப்பு ரூ.5 லட்சத்திலும், ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரன் நிதி பங்களிப்புடனும் ஒரு மாதத்திற்குள் கரடிகுடி வார சந்தை நவீனமாக்கப்படும். பொது மக்களுக்கு கழிப்பறை வசதியும் செய்யப்படும் என்றார். ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.


Next Story