ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
x

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

மதுரை

வாடிப்பட்டி

மதுரை மாவட்டவிற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 6 விவசாயிகளின் 20 ஆயிரத்து 515 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த 14 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.12.72-க்கும் குறைந்தபட்சமாக ரூ.4.51-க்கும், சராசரியாக ரூ.8.43-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.1 லட்சத்து 73ஆயிரத்து 012 தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் 7 விவசாயிகளின் 1357 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 21 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.71.81 குறைந்தபட்சமாக ரூ.48.10-க்கு சராசரியாக ரூ.56.81 ஏலம் போனது. இதனால் ரூ.77,092 கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயாவை தொடர்பு கொள்ளலாம்.


Next Story