57 வாகனங்கள் ரூ.3¾ லட்சத்துக்கு ஏலம்


57 வாகனங்கள் ரூ.3¾ லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

57 வாகனங்கள் ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்து 612-க்கு ஏலம் விடப்பட்டது.

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகனங்கள், பெர்மிட் இல்லாத வாகனங்கள், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள், சாலை வரி கட்டாத வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இவைகளை அதன் உரிமையாளர்கள் மீட்டுக்கொள்ளாததால் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் 28 இருசக்கர வாகனங்கள், 21 ஆட்டோக்கள், 7 சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு வேன் ஆகிய வாகனங்கள் ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்து 612-க்கு ஏலம் விடப்பட்டது.



Next Story