மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்ஆனைக்கல்பாளையத்தில் 29-ந்தேதி நடக்கிறது


மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்ஆனைக்கல்பாளையத்தில் 29-ந்தேதி நடக்கிறது
x

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆனைக்கல்பாளையத்தில் 29-ந்தேதி ஏலம் விடப்படுகின்றன

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு கார், 41 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 42 வாகனங்கள், ஈரோடு மாவட்ட ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது. மேலும் வாகனங்களை வருகிற 28-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் வருகிற 29-ந்தேதி ஏலம் நடக்கும் இடத்தில் காலை 7 மணி முதல் 10 மணிக்குள் முன் பணமாக செலுத்த வேண்டும்.

முன் பணம் செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 8523980906, 9498178003 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.


Next Story