ஆடி கிருத்திகை முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்


ஆடி கிருத்திகை முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
x

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். காவல், சுகாதாரம், மின்சாரம், நெடுஞ்சாலை, போக்குவரத்து, தீயணைப்பு, வனண் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

கூட்டத்தில் அடுத்த மாதம் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்றும், கோவில் அருகே மொட்டை அடிப்பதற்கு வசதிகள் செய்து அனுமதி அளித்து, அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், பொன்னை இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மேல்பாடி நித்தியானந்தன், வள்ளிமலை வாசுகி கோட்டீஸ்வரன், கோட்டீஸ்வரன் மற்றும் கோவில் உபயதாரர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story