வீட்டில் பிணமாக கிடந்த ஆடிட்டர்


வீட்டில் பிணமாக கிடந்த ஆடிட்டர்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வீட்டில் பிணமாக கிடந்த ஆடிட்டர்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

திருவனந்தபுரம் கேசவதாசபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 64), ஆடிட்டர். இவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி ஆடிட்டிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் ராமசாமியை காண அவரது உறவினர் ஒருவர் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ராமசாமி வாய் மற்றும் காது வழியாக ரத்தம் வடிந்து உறைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாகவும், அதற்கு சரியான சிகிச்சை எடுக்காததால் நரம்புகள் செயலிழந்து இறந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story