புதுப்பேட்டை அருகே பரபரப்புநள்ளிரவில் தீ பிடித்து எரிந்த ஆட்டோபோலீஸ் தீவிர விசாரணை
புதுப்பேட்டை அருகே நள்ளிரவில் ஆட்டோ தீ பிடித்து எரிந்தது.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே உள்ள பெரிய எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி மகன் ரமேஷ் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, தூங்க சென்றார்.
பின்னர் அதிகாலையில் பார்த்தபோது ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து கருகி எலும்பு கூடாய் நின்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தடையவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
நள்ளிரவில் ஆட்டோவுக்கு யாரேனும் தீ வைத்து சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.