மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வியாபாரி பலி
x

குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வியாபாரி பலியானார்.

வேலூர்

குடியாத்தம் செதுக்கரை விநாயகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 41), இவர் மோட்டார் சைக்கிளில் துணி வியாபாரம் செய்து வந்தார். குடியாத்தத்தில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். செதுக்கரை பச்சையம்மன் கோவில் அருகே செல்லும்போது எதிரே வேகமாக வந்த ஆட்டோ புருஷோத்தமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்த விபத்துக்கு குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து ஆட்டோவை ஓட்டி வந்த குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்த காளியப்பன் (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story