மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி
x

வேலூரில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலியானார்.

வேலூர்

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது ரகுமானியா (வயது 27), இவர் வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள செல்போன் விற்பனை, பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். ஷேக்முகமது ரகுமானியா வேலை முடிந்த பின்னர் ஆர்.என்.பாளையத்தில் வசிக்கும் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூர் முஸ்லிம் பள்ளி அருகே வந்தபோது எதிரே தொரப்பாடி நோக்கி வந்த ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஷேக்முகமது ரகுமானியா பலத்த காயமடைந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story