தீயில் எரிந்து ஆட்டோ நாசம்


தீயில் எரிந்து ஆட்டோ நாசம்
x

வேலூரில் தீயில் எரிந்து ஆட்டோ நாசமானது

வேலூர்

வேலூர் முள்ளிபாளையம் திடீர் நகரை சேர்ந்த கணேசன் (வயது 50). ஆட்டோ டிரைவர்.

இவரது ஆட்டோவை நேற்று இரவு வீட்டின் அருகே நிறுத்தினார். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென ஆட்டோ தீப்பற்றிக்கொண்டது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

எனினும் அணைக்க முடியவில்லை. ஆட்டோ முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மர்மநபர்கள் தீ வைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story