மாயமான ஆட்டோ கண்டுபிடிப்பு


மாயமான ஆட்டோ கண்டுபிடிப்பு
x

சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் மாயமான ஆட்டோவை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்டோவை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம்

சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் மாயமான ஆட்டோவை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்டோவை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோ டிரைவர்

சேலம் அம்மாப்பேட்டை வித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50), ஆட்டோ டிரைவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இன்சூரன்ஸ் உள்ளிட்ட சில ஆவணங்கள் இல்லாததால் அவரது ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து டவுன் போலீஸ் நிலையத்தில் ரவியின் ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே நேற்று முன்தினம் ரவி, சேலம் கோர்ட்டில் அபராத தொகையை செலுத்திவிட்டு தனது ஆட்டோவை எடுக்க டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு ஆட்டோ மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாரிடம் ரவி வாக்குவாதம் செய்ததோடு தனது ஆட்டோவை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொணடார். உடனே டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு மற்றும் அதிகாரிகள் ஆட்டோவை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆட்டோவை ஒப்படைக்க...

இந்த நிலையில், ரவியின் ஆட்டோ மணல் மார்க்கெட் அருகே உள்ள ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை போலீசார் அங்கு சென்று ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் ரவியிடம் அந்த ஆட்டோவை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது, தமிழகத்தில் சேலம் டவுன் போலீஸ் நிலையம் சிறந்த ேபாலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதற்காக போலீஸ் நிலைய வளாகத்தில் வழக்குகள் தொடர்பாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

அப்போது, ரவியின் ஆட்டோவை போலீசார் மணல் மார்க்கெட் பகுதியில் உள்ள வாகன நிறுத்தம் இடத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரவியிடம் உரிய ஆவணங்களை காண்பித்து அவரிடம் ஆட்டோவை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story