தொழிலாளியை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
தொழிலாளியை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் பாலு மகன் வசந்தகுமார் (வயது 35), கூலித்தொழிலாளி. இவரும், விழுப்புரம் அருந்ததியர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெய்கணேஷ் (38) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவருக்கு வசந்தகுமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செல்போன் கடையில் தனது அடையாள அட்டையை பயன்படுத்தி ரூ.15 ஆயிரத்துக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் ஜெய்கணேஷ், இதுவரை செல்போன் வாங்கியதற்கான தவணைத்தொகையை கட்டாததால் வசந்தகுமார், இதுபற்றி ஜெய்கணேசிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெய்கணேஷ், வசந்தகுமாரை திட்டி தாக்கி இரும்புக்கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்ய முயன்றார். இதில் காயமடைந்த வசந்தகுமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, ஜெய்கணேசை கைது செய்தனர்.