ஆட்டோ டிரைவர், மனைவியுடன் கைது
குடவாசல் அருக சாலைப்பணியை தடுத்து நிறுத்திய ஆட்டோ டிரைவர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
குடவாசல்;
குடவாசல் அருகே உள்ள சித்தாடி ஸ்டாலின் நகரில் அரசு சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பாலையா மகன் உலகநாதன் (வயது37) (ஆட்டோ டிரைவர்) மற்றும் அவரது மனைவி ஜெசிபுளோரா(34) ஆகிய இருவரும் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி ஆட்டோவை சாலை அமைக்கும் இடத்தில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்தக்காரர் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் வேலை நடைபெறும் இடத்துக்கு சென்றாா். அப்போது அவரை தரக்குறைவாக உலகநாதன் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் குடவாசல் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உலகநாதன், அவரது மனைவி ஜெசிபுளோரா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.