அழுகிய நிலையில் ஆட்டோ டிரைவர் உடல் மீட்பு


அழுகிய நிலையில் ஆட்டோ டிரைவர் உடல் மீட்பு
x

ஆம்பூர் அருகே அழுகிய நிலையில் ஆட்டோ டிரைவர் உடல் மீட்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர் ஏ கஸ்பா அபுக்கான் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் வடிவேல் (வயது 34)). ஆட்டோ டிரைவர். மூர்த்தி இறந்து விட்டதால் வடிவேல் தனது தாயார் பாரதியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயார் பாரதியும் இறந்து விட்டார். இதனால் வடிவேலு தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சவாரி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற வடிவேல் அதன்பிறகு வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் அழுகிய நிலையில் வடிவேல் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story