தக்கலை அருகே திராவகம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை


தக்கலை அருகே திராவகம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
x

தக்கலை அருகே குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

தக்கலை

தக்கலை அருகே குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டோ டிரைவர்

தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம் கோட்டைக்ககம் பகுதியை சேர்ந்தவர் அமீர்அலி (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருக்கு மினிமோள் (38) என்ற மனைவியும், ஆஷினா பர்வீன் (16) என்ற மகளும், அசாருதீன் (12) என்ற மகனும் உள்ளனர்.

அமீர் அலிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று காலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அமீர்அலி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பிவரவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் மேக்காமண்டபத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார் என்பவர் அமீர் அலியின் மனைவி மினிமோளுக்கு போன் மூலம் மாறாங்கோணம் பகுதியில் அமீர்அலி திராவகத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அழகியமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மினிமோள் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அமீர்அலி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அமீர் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story