ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
நித்திரவிளை அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே உள்ள கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவர் அந்த பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நோயால் உயிரிழந்தார். அதன்பின்பு ராஜன் மிகுந்த மனவேதனையில் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராஜன் கலிங்கராஜபுரம் பகுதியில் தனது ஆட்டோவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.