சேலம் நெத்திமேட்டில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் நெத்திமேட்டில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு மின் வாரிய அலுவலகம் எதிரே வசித்து வந்தவர் ரவிக்குமார் (வயது 45). திருமணம் ஆகாத இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் அவ்வப்போது கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே ரவிக்குமார் குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் தொடர்ந்து கவலை, மன உளைச்சல், விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு முற்றத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் ஆட்டோ டிரைவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story