மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி


மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி
x

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியானார்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 26) ஆட்டோ டிரைவர். அதே கிராமத்தில் உள்ள பிரவீன் குமாரின் பெரியம்மா குப்பம்மாள் வீட்டில் மின்விளக்கு எரியவில்லை. அதை சரிசெய்ய பிரவீன்குமாரை அழைத்துள்ளனர். அதன்பேரில் குப்பம்மாள் வீட்டிற்கு சென்ற பிரவீன்குமார் அங்கு மின்விளக்கை சரி செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரவீன் குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பிரவீன் குமாரின் மனைவி திவ்யபாரதி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story