மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி
மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியானார்.
விருதுநகர்
சிவகாசி
சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் பால் கண்ணன் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஷோபனா (29) என்ற மனைவியும், தவ முனீஸ்வரி (7), என்ற மகள், வெற்றிவேல் (4) என்ற மகனும் உள்ளனர். பால்கண்ணனின் வீட்டிற்கு அருகில் உள்ள மர கிளைகளை வெட்டும்போது இவரது வீட்டிற்கு வரும் கேபிள் வயர் அறுந்ததால் அதனை அவரே சரி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக கேபிள் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து பால் கண்ணன் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பால் கண்ணன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story