ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து


ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

கடலூர்:

கடலூர் வண்டிப்பாளையம் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் பிரபாகரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை நண்பரான புதுச்சேரி குருவிநத்தம் பகுதியை சேர்ந்த கலைமணி என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு கொடுத்திருந்தார். ஆனால் கலைமணி கடந்த 2 மாதமாக பிரபாகரனுக்கு வாடகை கொடுக்காமல் பாக்கி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் உண்ணாமலை செட்டி சாவடி வந்த கலைமணியிடம் பிரபாகரன் வாடகை பாக்கி கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது நண்பர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டை கந்தன் மகன் ராஜேஷ் (31), குருவிநத்தம் பாரதிநகர் சக்திவேல் மகன் ஸ்ரீதர் (24), அழகிய நத்தம் செல்வம் ஆகிய 4 பேரும் சேர்ந்து பிரபாகரனை ஆபாசமாக திட்டி, கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி பிரபாகரன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ், ஸ்ரீதர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story