ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் மணிமாறன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேரள மாநில அரசை போல தமிழகத்திலும் ஆட்டோவிற்கான இணைய வழி சேவையை நல வாரியத்தின் மூலம் தொடங்கிட வேண்டும், எரிபொருள் உள்பட அனைத்து விலை வாசி உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பலா் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.