திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் யுவராஜ், செயலாளர் பிரம்மா, பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்பாட் பைன் முறையை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை அமல்படுத்த கூடாது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 3-ம் நபர் காப்பீட்டு கட்டணத்தை குறைத்திட வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஆட்டோ சங்க மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story