ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு
x

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வேலூர், ஜூன்.16-

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேலூர்-பெங்களூரு சாலை, அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. முதற்கட்டமாக பெங்களூரு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகள், பேனர் உள்ளிட்டவைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து வேலூர் பழைய பஸ்நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோ டிரைவர்கள் கொடி கம்பம் நட்டு பேனர் வைத்திருந்தனர். அதனை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற முயன்றனர். அதற்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலையோரம் உள்ள அனைத்து கட்சி கொடிகம்பத்தையும் அகற்றினால், இந்த கொடி கம்பத்தை அகற்ற அனுமதிக்கிறோம் என்று ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலூர் வடக்கு போலீசார் ஆட்டோ டிரைவர்களை சமாதானப்படுத்தினர். ஆட்டோ டிரைவர்களின் எதிர்ப்பு காரணமாக கொடிகம்பத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றாமல் அங்கிருந்து சென்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Next Story