ஆட்டோ மெக்கானிக் வெட்டிக்கொலை
ஆட்டோ மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற பெண் மீதும் சராமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆட்டோ மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற பெண் மீதும் சராமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.
மெக்கானிக்
மதுரை எல்லீஸ்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). ஆட்டோ மெக்கானிக். இவர் நேற்று மாலையில் தனது வீட்டு வாசலில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய நண்பர் ஆசிப் மற்றும் சிலர் அங்கு வந்து, பிரகாசை, சரமாரியாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தனது வீட்டுக்குள் பிரகாஷ் ஓடினார்.
சாவு
ஆனாலும் அவர்களும் பின்தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரகாசின் சித்தி, அவர்களை தடுக்க முயன்றார். அவரையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது சித்தி படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.