ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
x

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

திருப்பூர்

காங்கயம்

காங்கேயம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பயணிகள் ஆட்டோ

முத்தூர் ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 55). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ ைவத்த ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று முருகேசன், அவரது மனைவி சத்யா (35), மகன் தீபக் (10) உறவினர்கள் ருத்ரபசுபதி (37), லலிதாம்பாள் (75), கந்தசாமி (65), சித்ரா (55) ஆகிய 7 பேருடன் திருப்பூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இரவு வீட்டிற்கு காங்கயம் - முத்தூர் சாலை வழியாக வந்தனர். ஆட்டோவை முருகேசன் ஓட்டி வந்தார்.

இரவு சுமார் 7 மணியளவில் காங்கயம் - முத்தூர் சாலையில் வந்த போது எதிர் பாராதவிதமாக முருகேசன் ஓட்டிச் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் முருகேசன் மற்றும் சத்யா, லலிதாம்பாள் ஆகிய 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மற்ற 4 பேரும் சிறு காயங்களுடன் தப்பினர்.

டிரைவர் பலி

படுகாயங்களுடன் இருந்த முருகேசன், சத்யா, லலிதாம்பாள் ஆகிய 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் முருகேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

படுகாயங்களுடன் இருந்த சத்யா மற்றும் லலிதாம்பாள் ஆகிய 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story