முக்கூடல் அருகே கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி- மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி


முக்கூடல் அருகே  கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி-  மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x

முக்கூடல் அருகே கால் வாயில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியானான். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் அருகே கால் வாயில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியானான். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆட்டோ கவிழ்ந்தது

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள இடைகால் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் மருதுபாண்டி (வயது 25). இவர் வீரவநல்லூரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துக் கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கரிகாலன் மகன் பிரமுத்து (வயது 16) என்பவனும் வந்தான். ஆட்டோவை மருதுபாண்டி ஓட்டினாா்.

பாப்பாக்குடியில் உள்ள சிறிய மழைநீர் வடிகால் பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது ஆட்டோ நிலைதடுமாறியது. இதனால் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆட்டோ கால்வாய்க்குள் விழுந்து கவிழ்ந்தது.

சிறுவன் பலி

இதில் பிரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்த மருதுபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரமுத்து உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story