ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி


ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
x

விளாத்திகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தை சேர்ந்த அழகர் என்பவரின் மனைவி முனியம்மாள். இவரது உறவனரான பராசக்தி என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை ெபற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரை பார்க்க முனியம்மாள் சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்றுஅதிகாலை 5 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து பூசனூர் கிராமத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன்(வயது 32) என்பவர் ஓட்டினார்.

குளத்தூர் கல்லூரி அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது திடீரென்று நிலைதடுமாறி சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த மணல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட முனியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்தவுடன் குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story