ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
x

சிவகாசி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

விருதுநகர்

சிவகாசி, -

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் பொன்குரு (வயது 28). இவருக்கும் புவனேஷ்வரி (21) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கபிலன் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. பொன்குரு விருதுநகரில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். வருகிற 29-ந்தேதி குலதெய்வ கோவிலில் குழந்தை கபிலனுக்கு முடிக்காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக உறவினர்களை அழைக்க பொன்குரு, புவனேசுவரி, கபிலன் ஆகியோர் ஆட்டோவில் காடனேரி அருகில் உள்ள கலிங்கப்பட்டிக்கு சென்றுள்ளனர்.

ஆட்டோவை பொன்குரு ஓட்டி சென்றுள்ளார். விருதுநகர்-எரிச்சநத்தம் ரோட்டில் உள்ள மருதநத்தம் விலக்கு அருகில் ஆட்டோ சென்ற போது திடீரென அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பொன்குரு ஆட்டோவை திருப்பி உள்ளார். இதில் நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பொன்குருவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. லேசான காயத்துடன் புவனேசுவரியும், கபிலனும் உயிர்தப்பினர். பின்னர் பொன்குரு, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.



Next Story