கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி ஈ.பி காலனியை சேர்ந்தவர் முருகன் என்பவருடைய மகன் உய்க்காட்டான் (வயது 22). ஆட்டோ டிரைவர். இவர் சன்னதுபுதுக்குடியில் இருந்து கயத்தாறுக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றார். ராஜாபுதுக்குடி அருகே நாற்கர சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த மொபட்டும், அவரது ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் உய்க்காட்டான் மற்றும் மொபட்டை ஓட்டி வந்த மலையூரான்குடியிருப்பை சேர்ந்த ராஜன் (50) ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உய்காட்டான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story