கோவில்பட்டியில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு முக்குலத்தோர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புதிதாக அறிவித்துள்ள மோட்டார் வாகன சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். தரமான சாலை அமைத்து, ஓட்டுநர் களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பின்னர் சட்டங்களை திருத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதி புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், வேன் ஓட்டுநர் சங்கம் மணிகண்டன், ராமசாமி, பாண்டிய ராஜன், மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.