ஆட்டோ தொழிலாளர்கள் தர்ணா


ஆட்டோ தொழிலாளர்கள் தர்ணா
x

ஆட்டோ தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பயணிகள் ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் பெரம்பலூரில் காந்திசிலை முன்பு நேற்று நடந்தது. மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 15 ஆண்டுகால ஆட்டோக்கள் காலாவதியானால் அரசே ஆட்டோ தொழிலாளர்களுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்கி உதவிட வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். உடனடி அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். வாகன காப்பீடு மற்றும் தகுதிச்சான்றுக்கான கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின், சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், பொருளாளர் இன்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.


Next Story