மின் சிக்கனம் குறித்த வாகன பிரசாரம்
தக்கலை மின்வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்த வாகன பிரசாரம்
தக்கலை,
தேசிய மின்சார சிக்கன வார விழாவையொட்டி, மின்சாரத்தை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் , ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மின்வாரிய தக்கலை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நேற்று மூலச்சலில் நடந்தது. மூலச்சலில் நடந்த இந்த நிகழ்ச்சியை தக்கலை செயற்பொறியாளர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் முகமது அலி, ராஜரெத்தின பாய், பிரேமலதா, சுனிதா லெஸ்லின் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டனர். வாகன பிரச்சாரமானது தக்கலை, இரணியல், குளச்சல், திருவட்டார், குலசேகரம், பேச்சிப்பாறை மற்றும் தக்கலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஒலிபெறுக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.