வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியின் தன்னாட்சி நீட்டிப்பு


வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியின் தன்னாட்சி நீட்டிப்பு
x

வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியின் தன்னாட்சி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரியின் தன்னாட்சி நிலை கடந்த 2017-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழக மானிய குழுவின் தன்னாட்சி குழுவினர் கல்லூரியில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக கல்லூரியின் தன்னாட்சி நிலை 2017- 2018-ம் கல்வி ஆண்டு முதல் வருகிற 2026 -2027-ம் கல்வி ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதற்கான ஆணை கல்லூரி நிர்வாகத்திடம் குழுவினர் வழங்கினர். இதற்காக பாடுபட்ட கல்லூரியின் தன்னாட்சி குழுவினரை கல்லூரி முதல்வர் மலர் பாராட்டினார்.


Next Story