ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்


ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்
x

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சுமார் 17 ஆண்டுகளாக எங்களது ஆட்டோ நிறுத்தம் உள்ளது. மாநகராட்சியின் அனுமதியோடு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நாங்கள் பணி செய்து வருகிறோம். இந்த ஆட்டோ நிறுத்தத்தில் 130 ஆட்டோக்கள் உள்ளது. எங்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. வாடகைக்கு ஆட்டோ ஓட்டியே வாழ்ந்து வருகிறோம். பலர் கடன் வாங்கி பிழைப்பை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் கல்வி கட்டணம், வங்கி கடன், ஆட்டோ வாடகை மற்றும் குடும்ப செலவுகளை சமாளித்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது, ஓட்டக்கூடாது என்று தெரிவிக்கின்றனர். எங்களது வாழ்வாதாரம் இந்த பஸ் நிலையத்தை நம்பியே உள்ளது. நாங்கள் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு செய்தது இல்லை. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இனி வரும் நாட்களில் நாங்கள் பணியை மேற்கொள்வோம். எனவே எங்கள் மீது கருணை வைத்து மீண்டும் அதே இடத்தில் ஆட்டோ நிறுத்தி ஓட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story