விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு


விவசாயிகளுக்கு தேவையான  உரங்கள் இருப்பு
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை

விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பயிர்கடன்

தற்போது விவசாயிகளுக்கு பயிர் கடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்கடனில் ஒரு பகுதி விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களாக வழங்கப்படுகின்றன. தற்போது ஐ.பி.எல்., இப்கோ, டி.ஏ.பி. உரங்கள் விவசாயிகளின் அடி உரமாக பயன்படுத்துவதற்காக வரவழைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது யூரியா 1700 டன், டி.ஏ.பி. 1300டன், பொட்டாஸ் 413 டன், காம்பளக்ஸ் 2074 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,

பயன்பெறலாம்

மேலும் விவசாயிகளுக்கு தேவைப்படும் டி.ஏ.பி. உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு ஏற்றவாறு உரங்கள் பெற்று பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story