அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்


அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
x

பழனி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆவணி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூதேவி, ஸ்ரீதேவி, அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிமரம் முன்பு கலசபூஜை நடந்தது. பின்னர் கலசநீர் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட கொடியில் தெளிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது. அதையடுத்து பூதேவி, ஸ்ரீதேவி, அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே வருகிற 10, 12-ந்தேதிகளில் நடைபெறுகிறது.


Next Story