சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா


சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
x

சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

நாகப்பட்டினம்

திருமருகல் வள்ளுவன் தோப்பில் சீராள மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி காப்பு கட்டுதல், பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திறுநீர், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இன்று(ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் ஆகியவை நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story