சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பெருந்திருவிழா
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பெருந்திருவிழா தொடங்கியது.
விருதுநகர்
விருதுநகரில் பழமை வாய்ந்த மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள் பாலித்தனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமியும் அம்பாளும் ரிஷபம், பூதம், அன்னம், யானை, காமதேனு, நந்தி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 7-ந் தேதியும், தேரோட்டம் 8-ந் தேதியும் நடைபெறுகிறது. 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.
Related Tags :
Next Story