தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
திருப்பூர்

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அவினாசி அருகே கிராம மக்கள் தலித் விடுதலை கட்சி பொது செயலாள செங்கோட்டையன் தலைமையில் வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியதாவது:-

அவினாசி தாலுகா நம்பியாம்பாளையம் ஊராட்சி உட்பட்ட சுண்டக்காம்பாளையம், நம்பியம்பாளையம், கரையப்பாளையம் ஆகிய ஊர்களில் 60 ஆண்டுகளாக, ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மேற்கண்ட 3 ஊர்களில் வசிக்கும் மக்கள் 120 குடும்பங்கள் 25 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகின்றனர்.

நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உருமங்குட்டை பகுதியில் பயன்படுத்தாத நிலம் உள்ளது. இந்த நிலத்தை 120 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் ரமேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story